ரூ.3.70 லட்சம் மோசடி ரயில்வே ஊழியர் கைது
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி தென்கரைத் தோப்பை சேர்ந்தவர் கவிதா, 28. தனியார் பள்ளி ஆசிரியை. கணவர் விஷ்ணு, அரசு வேலைக்கு முயற்சிக்கிறார்.
கவிதாவின் தோழியான சுகன்யா, 32, ரயில்வேயில் வேலை பார்க்கும் தன் கணவர் ஷாஜிக்கு, உயரதிகாரிகளை தெரியும் என்பதால், ரயில்வேயில் வேலை வாங்கித்தர முடியும் என்று கூறினார்.
தொடர்ந்து, கவிதாவை தொடர்புகொண்ட ஷாஜி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக, 3.70 லட்சம் ரூபாய் பெற்று, நியமன ஆணையும் கொடுத்தார்.
அதை பெற்றுக் கொண்டு விஷ்ணு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகத்திற்கு சென்றபோது, அது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது. இதுகுறித்து, கவிதா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்படி இருவர் மீதும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஷாஜியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
Advertisement
Advertisement