போதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் 'ஸ்டேரிங்' மீது சரிந்து மட்டையானார் கூச்சலிட்டு விபத்தை தவிர்த்த பயணியர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, சிவகங்கைக்கு அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் போதையில் தடுமாறி, 'ஸ்டேரிங்' மீது படுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த (டிஎன் 67 என் 1548) பஸ், நேற்று மதியம், பொள்ளாச்சியில் இருந்து சிவகாசி நோக்கி, 40 பயணிகளுடன் சென்றது. பஸ்சை, விருதுநகரை சேர்ந்த டிரைவர் அருள்மூர்த்தி, 50, ஓட்டினார்.
பஸ் டிரைவர், அவ்வப்போது குடிநீர் பாட்டிலில் 'மிக்சிங்' செய்து வைத்திருந்த மதுவை குடித்தார்; அதன்பின், வாயில் புகையிலை பொருட்களை வைத்துக்கொண்டு தடுமாறியபடி பஸ்சை ஓட்டியுள்ளார்.
பஸ்சில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணியர், இதை கவனித்து சக பயணியரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பயணியர், பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிடனர். ஆனால், நிதானமில்லாத டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. போதையில் பஸ்சை கட்டுப்பாட்டு இல்லாமல் ஓட்டியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பயணியர், டிரைவர் சீட் அருகே சென்று, பஸ்சை நிறுத்துமாறு ஆவேசமாக சப்தமிட்டபின், கோமங்கலம்புதுார் 'டோல்கேட்' பகுதியில் பஸ்சை நிறுத்தி, 'ஸ்டேரங்' மீது அப்படியே படுத்து விட்டார். அதன்பின், பஸ் நிறுத்தி சுதாரித்து, பின் சீட்டில் படுத்து விட்டார்.
அதன்பின், விருதுநகரை சேர்ந்த கண்டக்டர் வெங்கடேஷ், 55, பஸ் பயணியரை, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் மாற்றி அனுப்பி விட்டு, விருதுநகர் கிளைக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். டிரைவர் மீது குடிபோதையில் வாகனம் இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் கூறுகையில், 'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் மது குடித்த டிரைவர் அருள்மூர்த்தி, மீதம் உள்ள மதுவை, பாட்டிலில் கலந்து வைத்துள்ளார். மதியம், 1:25 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்சை எடுத்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், சந்தேகமடைந்த பயணியர் பஸ்சை நிறுத்தியுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படுகிறது,' என்றனர்.
கோவையில் இருந்து சென்ற அரசு பஸ்சில் இருந்து, குழந்தை தவறி விழுந்த சம்பவம் ஓய்வதற்குள், இந்த சம்பவம் நடந்துள்ளது பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு