மத்திய அரசுக்கு எதிராக இந்திரா பிளக்ஸ் பேனர்கள்

பெங்களூரு: பெங்களூரின் பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பிளக்ஸ் பேனர்களை இளைஞர் காங்கிரசார் வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் மீதான தாக்குதலை, மே 10ம் தேதியுடன் இந்திய ராணுவம் நிறுத்தியது. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், பெங்களூரு இளைஞர் காங்கிரசார், முதல்வர் சித்தராமையா வீடு, மவுரியா சதுக்கம், காங்கிரஸ் பவன், ஆனந்தராவ் சதுக்கம், கனரா பாங்க் சுவர், டவுன் ஹால், சேஷாத்திரிபுரம் ஆகிய இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
அதில், 'இந்தியாவுக்கு மோடியின் வார்த்தைகள் வேண்டாம்; எங்களுக்கு இந்திரா போன்ற செயல்பாடு தேவை' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:மக்களிடம் உள்ள குழப்பத்தை பிரதமர் மோடி தீர்த்துவைக்கவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் மக்களை தவறாக வழி நடத்துவார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசும்போது பெரிய முடிவை எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. சண்டை நிறுத்தப்பட்டதற்கு என்ன நிபந்தனை விதிக்கப்பட்டன? எந்த அடிப்படையில் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டனர் என்று விளக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக, இளைஞர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இந்திராவின் பிளக்ஸ் பேனர்கள்.
காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியதாவது:வெளிநாட்டுக் கொள்கைகள் நம்மை தனிமைப்படுத்திவிட்டன. இதற்கு மோடியின் கொள்கையே காரணம். போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை.பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு மோடி பதிலளிக்கவில்லை. தன்னால் தான் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை. இதற்கு முன்பு யாரிடமும் இந்தியா தலைகுனிந்ததில்லை. இந்தியாவின் இறையாண்மை மீறப்பட்டு உள்ளது.அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்திவிடுவேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு