நுகர்வோர் புகார்கள் பதிவு செய்ய விரைவில் புதிய இணையதளம்

பெங்களூரு: ''நுகர்வோரின் புகார்களை பதிவு செய்ய, புதிய இணையதளம் துவக்க பெஸ்காம் திட்டமிட்டுள்ளது,'' என, பெஸ்காம் நிர்வாக இயக்குனர் சிவசங்கர் தெரிவித்தார்.

கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிஷன், பெங்களூரு மின் வினியோக நிறுவனம் அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சிவசங்கர் பேசியதாவது:

நுகர்வோரின் புகார்களை பதிவு செய்ய, புதிய இணையதளம் துவக்க பெஸ்காம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கர்நாடக மின் ஒழுங்குமுறை கமிஷன் உத்தரவின்படி, சி.ஜி.ஆர்.எப்., எனும் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

புகார்கள் வந்தால், உடனடியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை நிவர்த்தி செய்து, நம் சேவையின் தரத்தை அதிகரிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான அமைக்கப்படும் மன்றத்தில், கண்காணிப்பு பொறியாளர், செயல் பொறியாளர்கள், உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.

சி.ஜி.ஆர்.எப்., அதிகாரிகள் வாடிக்கையாளர் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் குறித்து கே.இ.ஆர்.சி.,யிடம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement