ஹூப்பள்ளி - குஷ்டகி புதிய ரயில் நாளை துவக்கம்

பெங்களூரு: 'ஹூப்பள்ளியில் இருந்து கொப்பால் குஷ்டகி செல்லும் புதிய ரயில், நாளை துவங்குகிறது' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

ரயில் எண் 17327: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - குஷ்டகி தினசரி விரைவு ரயில், நாளை முதல், ஹூப்பள்ளியில் இருந்து தினமும் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:40 மணிக்கு குஷ்டகி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், எண் 17328: குஷ்டகி - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி தினசரி ரயில், 17ம் தேதி முதல், குஷ்டகியில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, 10:40 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும்.

ரயில் எண் 56927 / 56928: எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி - சிந்தனுார் - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி தினசரி பயணியர் ரயில், இன்று முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ராய்ச்சூரின் கோரேபல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ரயில் எண் 16545 / 16546: யஷ்வந்த்பூர் - சிந்தனுார் - யஷ்வந்த்பூர் தினசரி விரைவு ரயிலும்;

எண் 17303 / 17304: ஹூப்பள்ளி - சிந்தனுார் - ஹூப்பள்ளி தினசரி விரைவு ரயிலும் மே 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கோரேபல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

Advertisement