மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சி பூலாப்பட்டி பூலா கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிக்கு ஆயக்கட்டுதாரர்கள் வெள்ளைத் துண்டு வீசி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். கரைகளில் காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். இதில் பலருக்கும் கெண்டை, கெளுத்தி, விரால் என மீன்கள் கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement