மழைக்கு முன் வந்த மின்தடை

மானாமதுரை: மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை வருவதற்கு முன்பே மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சிப்காட் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு ராஜகம்பீரம் மின் பகிர்மானத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

சில மாதங்களாக மானாமதுரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மழை வருவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் கூட அதற்கு முன்பாகவே மின்தடை செய்யப்படுகிறது. இப்பிரச்னை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மானாமதுரை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisement