திருச்செந்துாருக்கு காவடி பாதயாத்திரை

தேவகோட்டை,: தேவகோட்டையில் இருந்து திருச்செந்துாருக்கு 49 வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை நேற்று துவங்கியது. அவர்களுடன் நகரத்தார் 9 பேர் காவடி கட்டி நகர்வலம் வந்து நேற்று அதிகாலை 5:00 மணியளவில் வேல் துணையுடன் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.

17 ந்தேதி முருகன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21 ந்தேதி காலை பாதயாத்திரை குழுவினர் திருச்செந்துாரில் ஆனந்த விநாயகர் கோயிலை அடைகின்றனர். மாலையில் திருச்செந்துார் செந்திலாண்டவருக்கு பால்குடம், காவடி சாற்றி வழிபடுகின்றனர்.

நேற்று முன்தினம் வெற்றி வேல் முருகன் குழு சார்பில் விபூதி பட்டை சாமியார் தலைமையில் மாவடி கருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் காவடிகள் எடுத்து திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

Advertisement