இலவச கண் பரிசோதனை
தர்மபுரி, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''தர்மபுரி மாவட்டதில் கடந்த, 10ல், பள்ளி வாகனங்களுக்கான ஆய்வும், பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் பள்ளி வாகனங்களை ஓட்டி செல்லும் டிரைவர்களுக்கு கண் பார்வை தெளிவு முக்கியம். அதன்படி அவர்களுக்கு தற்போது கண் பரிசோதனை நடத்தப்படுகிறது,'' என்றார்.
முகாமில் கலந்து கொண்ட, 256 பள்ளி வாகன டிரைவர்களில், 15 பேருக்கு கண்ணில் புரை உள்ளது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், பாலசுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement