கல்விக்கு வயது தடையில்லை; 70 வயதிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி பாஸ் ஆன முதியவர்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன்(70). இவர் இதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பின்னர் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தார்/ அப்பொழுது அவர் தந்தை மற்றும் தாய் இறந்துவிட படிப்பை தொடர முடியாமல் நிறுத்தி உள்ளார்.
பெற்றோர் மறைந்த பின்பு தாத்தா மற்றும் பாட்டி அரவணைப்பில் படித்து வந்து அவருக்கு, ஒரு கட்டத்தில் பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் அவரது தாய் மாமன் ராஜகோபால் என்பவர் ரயில்வேயில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்பொழுது கோதண்டராமன் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் கேங்மேன் பணியில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு 4 ரூபாய் 35 காசுகள் சம்பளம் தரப்பட்டது.
பின்னர் 1980ல் ரயில்வே துறையில் பணி நியமன ஆணையை பெற்றார் . பின்னர் அங்கேயே 30 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.
பணி ஓய்வுக்கு பின் கடலூரில் 2002ம் ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்வை முடித்த பின்னர் 2024ம் ஆண்டு பத்தாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதி இருந்தார். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற அவர் மூன்று பாட பிரிவில் தோல்வியடைந்தார், அதன் பின்னர் தமிழ் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி அடைந்தார். ஆனால் ஆங்கிலத்தில் தோல்வி அடைந்ததால் மீண்டும் படிக்கத் தொடங்கினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அவர் சிதம்பரம் நந்தனார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து முதியவர் கோதண்டராமன் கூறியதாவது;
படிப்பிற்கு வயது முதிர்வு தடங்கல் இல்லை. என்னை பார்த்து மற்ற மாணவர்கள் தேர்வு எழுத போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். வெற்றிக்கு எனது மகன் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 143 பேர் பலி
-
செல்வப்பெருந்தகை மீதான முறைகேடு புகார்: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
மே 29, 30 தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
-
உண்மை அடிப்படையில் நாட்டை இயக்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்கதேசத்தினர் 13 பேர் கைது
-
மீண்டும் புதிய கொரோனா அலையா; சிங்கப்பூர், ஹாங்காங்கில் தொற்று அதிகரிப்பு