உலக டேபிள் டென்னிஸ்: சாதிப்பாரா மணிகா பத்ரா

தோகா: உலக டேபிள் டென்னிஸ் தொடரில் மணிகா பத்ரா, சத்யன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் சாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று முதல் வரும் மே 25 வரை நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 11 பேர் பங்கேற்கின்றனர். ஆண்கள் ஒற்றையரில் சத்யன் ஞானசேகரன், மானவ் தாக்கர், மானுஷ் ஷா, அங்குர் பட்டாசார்ஜி களமிறங்குகின்றனர். பெண்கள் ஒற்றையரில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, தியா, யாஷஸ்வினி பங்கேற்கின்றனர். இரட்டையர் பிரிவில் ஹர்மீத் தேசாய், அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி விளையாடுகின்றனர்.
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஒரு பதக்கம் கூட பெறவில்லை. இம்முறை இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வென்று வரலாறு படைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement