மணப்பட்டு சமூக காட்டில் மணல் கொள்ளை ?

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே வனத்துறையின் கட்டுபாட்டில், உள்ள சமூக காட்டில் இருந்து, சட்ட விரோதமாக மணல் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அடுத்துள்ள மணப்பட்டு வருவாய் கிராமத்தில் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சமூக காடு உள்ளது.
இங்கு, நரி, மயில், முயல், பாம்பு, உடும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த வனப்பகுதியில் இருந்து, ஜெ.சி.பி., மூலமாக மணல் தோண்டி எடுக்கப்பட்டு லாரிகளில் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.
தகவலறிந்த மூ.புதுக்குப்பம் மீனவ கிராம மக்கள் அங்கு சென்று, லாரிகளை தடுத்து நிறுத்தி, மணல் கொண்டு செல்வது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு, வனத்துறைக்கு அனுமதியுடன் தான் மணல் கொண்டு செல்லப்படுவதாக கூறி உள்ளார்.
அப்படியெனில், அதற்கான உரிய ஆவணத்தை காட்டுங்கள் என கூறி வாக்குவாதம் செய்து, மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து இது குறித்து வருவாய்த்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பாகூர் வருவாய் துறையினர், இது குறித்து வனத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர். கிருமாம்பாக்கம் போலீசாரும் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிப்பதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும்
-
வீடு, தொழிற்சாலைகளில் 'ஒயரிங்' பணி முடிந்ததும் சோதனை அறிக்கை கட்டாயம்
-
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரியர்
-
இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்
-
ரயிலில் முன்பதிவு பெட்டியில் இதர பயணியரை தடுக்க ஆர்.பி.எப்., சிறப்பு குழு
-
13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை
-
'கிரைண்டர் ஆப்'பில் பழகி மொபைல், டூ வீலர் பறிப்பு