மகள் மாயம் : தந்தை புகார்

புதுச்சேரி: புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சரவணன் மகள் ஷாலினி, 26; கடந்த 13ம் தேதி, புதுச்சேரியில் உள்ள தனது தோழியுடன் வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement