சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவம்; கோவையைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி

சாத்தான்குளம்:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் வந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 7 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர்.
இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டும் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர்.
அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி தேடினர். கிணற்றுக்குள் விழுந்த குழந்தை உள்பட 5 பேர் இறந்த நிலையில் மீீட்கப்பட்டனர். இது அப்பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
m.arunachalam - kanchipuram,இந்தியா
17 மே,2025 - 21:13 Report Abuse

0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
17 மே,2025 - 20:03 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
17 மே,2025 - 19:43 Report Abuse

0
0
Reply
மணி - ,
17 மே,2025 - 19:20 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement