வாகனம் மோதி ஒருவர் பலி

செஞ்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செஞ்சி - திண்டிவனம் இடையே உள்ள களையூர் கிராமம் அருகே நேற்று அதிகாலை 1 மணியளவில், சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கதக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாசனம் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலே இறந்தார். வி.ஏ.ஓ., புகழரசன் கொடுத்த புகாரின் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement