பைனலில் அல்காரஸ்-சின்னர்: இத்தாலி ஓபனில் மோதல்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பைனலில் ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னர் மோதுகின்றனர்.


ரோமில், இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். மூன்று மாத ஊக்கமருந்து தடைக்கு பின் களமிறங்கிய சின்னர் 1-6, 6-0, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் அல்காரஸ், சின்னர் மோதுகின்றனர்.

Advertisement