எள் பயிரில் பூச்சி மேலாண்மை உழவியல் விஞ்ஞானி யோசனை

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் விஞ்-ஞானி சரவணகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப-தாவது:
எண்ணெய் வித்து பயிரான எள், ஈரோடு மாவட்டத்தில், 5,000 முதல், 8,000 ெஹக்டேர் பயிராகிறது. பூச்சி தாக்கத்தால் பயிர் பாதித்து, எண்ணெய் உற்பத்தி திறன் குறையும். குருத்து இலை பிணைக்கும் புழு, பச்சை கொம்பு புழு, தத்துப்பூச்சி, அசுவினி அதிக சேதாரத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை இனம் கண்டு, ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
குருத்து இலை பிணைக்கும் புழு, இளம் பச்சை நிறத்தில் இருக்கும். தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பு வெள்ளை நிற ரோமங்களுடன் காணப்படும். இவை இளம் குருத்-துக்களை உண்டு சேதப்படுத்தும். இதை கட்டுப்படுத்த, எள் பயிரில் ஊடு பயிராக சிறுதானியங்கள், நிலக்கடலையை சாகுபடி செய்யலாம். விதைத்த, 45ம் நாள் அல்லது புழுக்களின் பொருளா-தார சேத நிலை அதிகரிக்கும்போது, மாலத்தியான் தெளித்து கட்-டுப்படுத்தலாம்.
தத்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இதை தவிர்க்க விதை-களை இமிடாகுளோபிரிட் ஒரு கிலோ விதைக்கு, 5 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். துவரையை ஊடுபயிராக விதைக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகரித்தால், டைமீத்தேயோட், 500 மி.லி., கலந்து தெளிக்கலாம்.
அசுவினி பூச்சி மஞ்சள் கலந்த கருமை நிறத்தில், இலைகளின் சாறை உறிஞ்சும். இப்பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை இலை-களின் மேல் சுரக்க, இலைகளின் மேல் கரும்படலம் ஏற்பட்டு ஒளிச்சேர்க்கை பாதிக்கும். இமிடாகுளோர்பிட் மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகரித்தால், மோனோகுரோட்டோபாஸ் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு, 2 மி.லி., வீதம் தெளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement