மழையால் போட்டி ரத்து: வெளியேறியது கோல்கட்டா

பெங்களூரு: பெங்களூரு, கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான பிரிமியர் லீக் போட்டி மழையால்ரத்தானது.
இந்தியாவில், பிரிமியர் லீக் 18வது சீசன் நடக்கிறது. போர் பதட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் துவங்கின. பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த லீக் போட்டியில் பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் விளையாட இருந்தன.
ஆனால் கனமழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' வாய்ப்பைஅதிகப்படுத்திக் கொண்டது.12 போட்டியில் 12 புள்ளி பெற்றகோல்கட்டா அணி,'பிளே-ஆப்'வாய்ப்பை இழந்தது.
சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்தியாவின் விராத் கோலி ஓய்வை அறிவித்தார். சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் இனி இவரை பார்க்க முடியாது. எனவே சின்னசாமி மைதானத்திற்கு வந்த இவரது ரசிகர்கள் சிலர், 'விராத் 18' என்ற ஆங்கில வார்த்தை இடம் பெற்றிருந்த கோலியின் டெஸ்ட் ஜெர்சி அணிந்து வந்து கவுரவித்தனர்.
மேலும்
-
ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
-
காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
-
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
-
'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'
-
கர்நாடகாவிலிருந்து கொண்டு வந்த 58 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
-
ஓசூரில் பாகலுார் சாலை பணிகள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு