ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
மாணவர் சரண், 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், திவேஷ், 494 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், மாணவி ஸ்ரீமது, 493 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பெற்று பள்ளிக்கும், பெற்றோருக்கும் சிறப்பு சேர்த்துள்ளனர். மேலும், 490க்கு மேல், 7 மாணவர்களும், 480க்கு மேல், 22 மாணவர்களும், 450க்கு மேல், 81 மாணவர்களும், 400க்கு மேல், 165 பேரும் மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வு எழுதிய, 237 மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி தாளாளர் மூகாம்பிகை கோவிந்தராஜ், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.