90 மீ., துாரம் தொடரும் * நீரஜ் சோப்ரா உறுதி

தோகா: ''அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து 90 மீ., துாரத்துக்கும் மேல் எறிய முயற்சிப்பேன்,'' என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கத்தாரில் டைமண்ட் லீக் தடகளம் நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் பங்கேற்றனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் 2021ல் தங்கம் (டோக்கியோ), 2024ல் வெள்ளி (பாரிஸ்) என இரு பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட 10 பேர் பங்கேற்றனர். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 90.23 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, இந்த இலக்கை (90 மீ.,) எட்டிய முதல் இந்தியர், 3வது ஆசிய வீரர், 25வது சர்வதேச வீரர் ஆனார். தவிர புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2022ல் 89.94 மீ., எறிந்து இருந்தார்.
அடுத்த சிறிது நேரத்தில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர், 91.06 மீ., எறிந்து முதலிடம் பிடிக்க, நீரஜ் சோப்ராவுக்கு இரண்டாவது இடம் மட்டும் கிடைத்தது.
நீரஜ் சோப்ரா கூறியது:
ஈட்டி எறிதலில் 90 மீ., துாரம் என்ற இலக்கை அடைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இரண்டாவது இடம் பிடித்ததால் சற்று ஏமாற்றமாக இருந்தது. கடந்த 2022ல் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் எனது முந்தைய அதிகபட்ச துாரமான 89.94 மீ., எறிந்து தேசிய சாதனை படைத்தேன். அப்போது, எனக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது.
தற்போது மீண்டும் புதிய தேசிய சாதனை படைத்துள்ளேன். ஆனால் மறுபடியும் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதனால் இனிப்பும், கசப்பும் கலந்த அனுபமாக உள்ளது.
இருப்பினும், நான் எப்போது 90 மீ., துாரம் எறிவேன் என எதிர்பார்த்து இருந்த இந்தியர்களின் எண்ணம் நிறைவேறிவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் உலக சாம்பியன்ஷிப் (ஜப்பான்) உட்பட பல்வேறு தொடர்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.
வழக்கமாக 89 மீ., துாரத்திற்கும் மேல் எறிந்த நான், இனிமேல் 90 மீ., துாரத்திற்கும் அதிகமாக எறிய முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் பாராட்டு
பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,' தோகா டைமண்ட் லீக்கில், முதன் முறையாக 90 மீ., என்ற இலக்கை அடைந்து, தனது சிறப்பான துாரத்தை எட்டி, வியக்கத்தக்க சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், ஒழுக்கம், தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதற்கு கிடைத்த பரிசு இது. ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி, பெருமை கொள்கிறது.'' என்றார்.
கைகொடுத்த காற்று
நீரஜ் சோப்ரா பயிற்சியாளர், முன்னாள் ஈட்டி எறிதல் வீரர் ஜான் ஜெலெஸ்னி 58. செக்குடியரசை சேர்ந்த இவர், 98.48 மீ., துாரம் எறிந்து உலக சாதனையாளராக உள்ளார். நீரஜ் சோப்ரா கூறுகையில், ''வழக்கமாக டைமண்ட் லீக் போட்டிக்கு ஜெலெஸ்னி வரமாட்டார். இம்முறை தோகா வந்த இவர், 90 மீ., துாரம் என்ற லட்சியத்தை அடையும் நாள் என்றார். இலக்கை எட்டியதும், இன்னும் 2 - 3 மீ.,. துாரம் அதிகமாக எறியலாம் என ஊக்கம் தந்தார். தவிர காற்றும் கைகொடுத்தது,'' என்றார்.
மேலும்
-
வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம் 'கோவிந்தா' கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
-
திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
-
திடீர் மழையால் கிர்ணி பழம் விளைச்சல் பாதிப்பு மணலி விவசாயிகள் வேதனை
-
பாகிஸ்தானால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்: அசாதுதீன் ஓவைசி
-
தடுப்பணைகள் சேதம்: விவசாயிகள் வேதனை
-
மேடவாக்கம் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை