வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

கோவை :சிங்காநல்லுார் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் திருடிச்சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார், சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமார்,48; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 11ம் தேதி, மதுரைக்கு சென்றார். இந்நிலையில், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக, நேற்று முன் தினம் பக்கத்து வீட்டில் வசிப்பவர் போன் செய்தார்.

ராஜகுமார் வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 16.5 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. ராஜகுமார் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி, திருடர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement