இடிக்கப்பட்ட கொடி பீடம் போக்குவரத்துக்கு இடையூறு

ராசிபுரம்: ராசிபுரம் பகுதி யில் இடிக்கப்பட்ட கொடி பீடங்கள் போக்குவரத்-துக்கு இடையூறாக குவிந்துள்ளதால், அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராசிபுரம் சுற்று வட்டார பகுதி யில் பொது இடங்களில் இருந்த கட்சி, சங்கங்களின் கொடி கம்பங்-களை நெடுஞ்சாலைத்துறையினர், கடந்த வாரம் அகற்றினர்.
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்-டன. கொடி கம்பங்களை அகற்றும்போது, கொடி கம்பங்கள் இருந்த சிமென்ட் பீடங்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.
இடிக்கப்பட்ட செங்கல், சிமென்ட் கான்கிரீட் ஆகியவற்றை அதே இடத்தில் குவிந்துள்ளன. ராசிபுரம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம் ஆகிய பகுதிகளில் சாலையோரமே இந்த கான்கிரீட் குவியல் இருப்பதால் போக்-குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வா-கங்கள் மூலம் அவற்றை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement