நைட்டிங்கேல் கல்லுாரியில் செவிலியர் தினம் உற்சாகம்

கோவை : கோவை நைட்டிங்கேல் கல்விக் குழுமங்களின் சார்பில், உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. நைட்டிங்கேல் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, இந்திய ராணுவ செவிலியர் பிரிவில் பணியாற்றிஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டொலேசியஸ் புளேரா பங்கேற்றார்.
மாணவர்களிடையே அவர் பேசுகையில், ''மற்ற பணிகளை போல் அல்லாமல், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன், செவிலியர் பணியை செய்ய வேண்டும். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் செவிலியருக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது, '' என்றார்.
செவிலியர் தின வார விழாவையொட்டி, நைட்டிங்கேல் கல்விக் குழுமங்களின் கல்லுாரிகளுக்கு இடையே, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் செயலர்கள் ராஜீவ், சஞ்சய், கல்லுாரியின் முதல்வர்களான டாக்டர்கள் சோபியா ஜூலியட், ராஜன், மும்தாஜ், இந்துலதா, அண்ணம், மற்றும் பொன்னம்மாள், துணை முதல்வர்கள் துர்கா, முகில், திலகவதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.