மாமனாரின் மண்டையை உடைத்த மருமகன்

அவிநாசி : கோவை, ஒண்டிப்புதுார், கண்ணன் நகரை சேர்ந்த மனோகர் 52, கண்ணம்மாள் 48, தம்பதியினர். இவர்கள் மகள் பிரியாவுக்கும், திருமுருகன்பூண்டி திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த டெய்லர் சுரேஷூக்கும், கடந்த, ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நான்கு வயதில் மகன் உள்ளார்.

சுரேஷுக்கும், அவருடன் வேலை பார்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த பிரியா, மகளிர் போலீசாரிடம் கணவர் மற்றும் பெண் மீதும் புகார் அளித்தார். இதனால், கடந்த ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இருப்பினும், தனது மகளை கணவருடன் சமாதானம் பேசி சேர்த்து வைக்க மனோகர், பிரியாவை அழைத்து கொண்டு, திருமுருகன்பூண்டிக்கு நேற்று வந்துள்ளார். ஏற்பட்ட தகராறில், பூட்டை எடுத்து மனோகர் தலையில், சுரேஷ் தாக்கினார். இதில், அவரின் மண்டை உடைந்ததால், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement