ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்

கரூர்: கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை வழியில், புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது. திருச்சி உள்-ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இருந்து கரூர் வழியாக ஈரோடு மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நாள்தோறும், 15க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்-றன.


ரயில்கள் செல்லும் போது, புகழூரில் உள்ள கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில் வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பகுதி-களில் இருந்து, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வாகனங்-களில் விரைவாக செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் அவ-திப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

புகழூரில், டி.என்.பி.எல்., காகித ஆலை செயல்படுகிறது. மேலும் அந்த பகுதிளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்-போது கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடம், மின் தடமாக மாற்-றப்பட்டுள்ளது. அதிக ரயில்கள் செல்ல துவங்கியுள்ளன. எதிர்கா-லத்தில் ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், புகழூரில், கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement