செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கடலுார்: குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றனர்.

குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 116 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

மாணவி புவனேஷ்வரி 600க்கு 581 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர்கள் சிவசங்கரி, ஆதி, அறிவழகன் 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர்கள் விக்னேஷ், சாருமதி 576 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

கணிதம் பாடத்தில் மாணவர்கள் புவனேஷ்வரி, அதி, அனுஷ்யா, வேதியியல் பாடத்தில் அனுஷ்யா, பரத்ராஜ், உயிரியல் பாடத்தில் மாணவர் அறிவழகன் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 115 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி நதியா 500க்கு 492 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி தனஸ்ரீ 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி புஷ்ரா 488 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

அறிவியல் பாடத்தில் 16 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 400க்கும் மேல் 92 பேர், 450க்கும் மேல் 52 பேர் மதிப்பெண் பெற்றனர்.

சாதனை மாணவர்களை தாளாளர் ராஜகோபால், செயலாளர் ராம்பிரசாத், முதல்வர் ரத்தினவேலு பாராட்டினர்.

Advertisement