மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு 'தலைவலி'
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் குவிந்துள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தலைவலியாக உள்ளது.
விபத்து, பிற காரணங்களால் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்கள் அதிகபட்சம் 2 நாட்களுக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். ரோட்டில் இறந்து கிடப்பவர்கள், உறவினர்கள் துணையின்றி மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் அடையாளம் கண்டு ஒப்படைக்கும் வரை மார்ச்சுவரியில் பாதுகாக்கப்படும்.
இங்கு 34 உடல்கள் வைப்பதற்கு 'ப்ரீசர்' வசதியுள்ளது. ஏப்., கடைசி வாரம் முதல் அடையாளம் காணப்படாத உடல்களை தற்போது வரை போலீசார் எடுத்துச் செல்லவில்லை.
இதுகுறித்து மருத்துவஅதிகாரி கூறும் போது, ''சித்திரை திருவிழாவை காரணம் காட்டி உடல்களை பெறாமல் போலீசார் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் 10 நாட்களுக்குள் உடல்களை அடையாளம் காணமுடியாவிட்டால் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்த கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மேலும்
-
டில்லி ஆம் ஆத்மியில் இருந்து 13 கவுன்சிலர்கள் விலகல்; 'இந்திர பிரஸ்தா' என்ற புதிய கட்சி துவங்கினர்
-
திருமணம் முடிந்த 20 நிமிடத்தில் புது மாப்பிள்ளை திடீர் மரணம்
-
எய்ம்ஸ் ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் விபத்து
-
தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு
-
பள்ளப்பட்டியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் மக்கள் பீதி
-
மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம்