ஸ்கூட்டர் மீது கார் மோதி தம்பதி பலி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கன்திடலைச் சேர்ந்தவர் சீனிவாசன் 65. மனைவி கருப்பாயி 60.

நேற்று சங்கன்திடலில் இருந்து திருச்சி ராமேஸ்வரம் பைபாஸில் ஸ்கூட்டரில் இவர்கள் சென்றனர்.

திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற கார் மோதியது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலும் கருப்பாயி காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement