மரபணு மாற்ற நெல்லை அனுமதிக்க கூடாது! உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ஆவேசம்
பல்லடம்: ''மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்கள் அமல்படுத்தப்பட்டால், மிகப்பெரிய விவசாய போராட்டங்கள் நடக்கும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து கண்-டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த காலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மரபணு மாற்-றப்பட்ட பருத்தி விதைகள் அமல்படுத்தப்பட்டு, பல மடங்கு விளைச்சல் அதிகரிக்கும் என்று ஆசை காட்டி பயிரிட வைத்-தார்கள்.
அதிக கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு விளைச்சல் கிடைக்கவில்லை. நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் நஷ்-டத்தை சந்தித்து தற்கொலை செய்த வரலாறுகளும் நடந்துள்ளன.
மரபணு மாற்றப்பட்ட நெல் ரகமாக இருந்தாலும், கத்தரி, தக்-காளி என காய்கறி பயிர்களாக இருந்தாலும், இவற்றை தமிழ-கத்தில் அனுமதிக்க கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் காய்கறிகளோ, நெல் உள்ளிட்ட தானியங்களோ உற்பத்தி செய்யப்பட்டால், அதன் மூலம் மண்ணுக்கும் மனித உடலுக்கும் ஆபத்து உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இது குறித்து தெளிவுபடுத்-தியதை தொடர்ந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகள் தமிழ-கத்தில் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலத்தைப் போன்றே, தற்போது, மரபணு மாற்றப்-பட்ட, திருத்தப்பட்ட நெல் ரகங்களை கொண்டுவர முயற்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவித்து, பாரம்பரிய விதை ரகங்-களை மீட்டெடுத்து, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மானிய திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது.
இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக விவசாயம் மற்றும் மக்களை ஆபத்-திலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.