சென்னிமலை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

சென்னிமலை: சென்னிமலை தெற்கு வனப்பகுதியை ஒட்டி யுள்ள சில்லாங்-காட்டுவலசு, பாப்பங்காட்டை சேர்ந்த விவசாயி அப்புகுட்டி, 76; தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். கால்நடை வளர்த்து வருகிறார்.


நேற்று முன்தினம் அதிகாலை பால் கறக்க சென்றபோது, ஒரு வெள்ளாட்டை காணவில்லை, தோட்டத்தை ஒட்டி போடப்பட்-டுள்ள கம்பி வேலி வரை சென்றபோது, வேலிக்கான கல் துாணில் ஆட்டு ரோமம ஒட்டியிருந்தது.மர்ம விலங்கின் கால் தடமும் தென்படவே சென்னிமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வன ஊழியர்களும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். இதில் மர்ம விலங்கின் கால்தடம், சிறுத்-தைக்கு உரியதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மீண்டும் பீதி கிளம்பியுள்ளது.

Advertisement