தேர்திருவிழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்-னிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம், லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது.

குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். இன்று நடக்கும் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது, அனைத்து தரப்பு

மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை இன்றி விழா நடத்துவதற்கு, மக்கள் முன் வர வேண்டும் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


கோவில் நிர்வாகம் மற்றும் லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், 'தேர் திருவிழா அமைதி-யான முறையில் நடப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்கப்படும்' என தெரிவித்தனர்.

Advertisement