கே.எல்.ராகுல் சதம்: குஜராத் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு

புதுடில்லி:குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணி 199 ரன்கள் எடுத்தது.


டில்லி- குஜராத் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

18-வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 60 வது போட்டி, இன்று டில்லியில் நடைபெறுகிறது.

இந்த போட்டி,டில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

முதலில் களமிறங்கிய டில்லி அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

கடைசி ஓவர் வரை விளையாடிய கே.எல்.ராகுல் அதிரடியாக சதம் அடித்தார். அவர் 65 பந்துகளை எதிர்கொண்டு, 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

டுபிளசிஸ் 5 ரன்களில் அர்ஷத் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அபிஷே க் போரல் மற்றும் கேப்டன் அக்ஷர் பட்டேல் ஒரளவுக்கு நிலைத்து ஆடி ரன் குவித்தனர்.

அதில் போரல் 30 ரன்களுக்கும் அக்ஷர் பட்டேல் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

த்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் சேர்க்க, டில்லி அணி,20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.

குஜராத் தரப்பில் அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனை அடுத்து குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement