இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் பயங்கரவாதி பாக்.,கில் சுட்டுக்கொலை

12

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஜமானி என்ற அபு சயியுல்லா என்பவன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அவனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இவன் செயல்பட்டு உள்ளான்.

2001ல்காஷ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல்

2005ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு

2006ல் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இவனுக்கு முக்கிய பங்கு உள்ளது.

Advertisement