'ஆப்பரேஷன் சிந்துார்' புது வீடியோ வெளியீடு

புதுடில்லி, மே 19-

'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பாக புதிய வீடியோவை நம் ராணுவம் நேற்று வெளியிட்டது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், கடந்த 7ல், பாகிஸ்தானில் நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்கள் நீடித்த மோதல், பாக்., கெஞ்சியதை அடுத்து, கடந்த 10ல் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோவை, சமூக ஊடகங்களில், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் நம் ராணுவத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதிய வீடியோ ஒன்றை, நம் ராணுவத்தின் மேற்கு கட்டளை மையம் வெளியிட்டுள்ளது.

அதில், போர் நிறுத்தத்துக்கு முன் கடந்த 10ல், பாக்., மீது நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவில், 'பஹல்காம் தாக்குதலுக்கு இது பழிவாங்கல் அல்ல; நீதி' என, ராணுவ வீரர் ஒருவர் கூறுவது இடம் பெற்றுள்ளது.

Advertisement