ஆந்திராவில் 3 விபத்துகளில் 9 குழந்தைகள் பலி

சித்துார்: ஆந்திர மாநிலம், ஏலுாரு மாவட்டம் தோரமாமிடி நீர்த்தேக்கத்தில் ஷேக் சித்திக், 10, மற்றும் ஷேக் அப்துல், 8, ஆகிய இரு சிறுவர்கள் நேற்று குளிக்கச் சென்றனர். இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், நீச்சல் வீரர்களை வைத்து தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

சித்துார் மாவட்டம், குப்பம் அருகே தேவராஜபுரம் கிராமத்தில் கவுதமி, 7, அஸ்வின், 7, ஷாலினி, 6, ஆகிய மூன்று குழந்தைகள் நேற்று குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

விஜயநகரத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காரின் உள்ளே விளையாடிய 8 - 10 வயதுடைய நான்கு குழந்தைகள், கதவு மூடிக்கொண்டதால் காரிலிருந்து வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

Advertisement