அத்தை, மருமகன் தீயில் கருகி பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஜான் 35. நேற்றிரவு 9:00 மணியளவில் அவரது வீட்டில் அவரும், 65 வயதான அவரது அத்தையும் தீயில் கருகிக்கொண்டிருந்தனர்.

தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். அப்பெண் தீக்குளிக்க முயன்றதும், அவரை காப்பாற்ற முயன்ற ஜானும் தீயில் காயமுற்று இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement