வெள்ளத்தில் மாயமான மூதாட்டி உடலை தேடும் பணி தீவிரம்

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மனைவி முத்துலட்சுமி, 77. இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள மாரியம்மன் கோவில் ஓடையை கடக்க முயன்றார்.

அப்போது, கனமழை காரணமாக, ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் மூதாட்டி சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதையறிந்த ஆலடி போலீசார் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் இரவு முழுதும் மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டி அணிந்திருந்த சேலை, ஓடையில் இருந்த முட்புதரில் சிக்கியிருந்தது. இதனால், மூதாட்டியின் உடல் மண்ணில் புதைந்திருக்கலாம். ஓடையில் மண்ணை தோண்டி தேடும் பணி தொடர்ந்து நடந்தது.

Advertisement