போதையில் காரை ஓட்டி விபத்து இ.சி.ஆரில், போலீசார் சோதனை

புதுச்சேரி : மது போதையில், காரை ஓட்டிய விபத்து ஏற்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து, இ.சி.ஆரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இ.சி.ஆரில் , நேற்று முன்தினம் இரவு போதையில் காரை வேகமாக ஓட்டிய போது, பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தினமலரில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதனை அடுத்து, நேற்று இ.சி.ஆர்., சாலை, கொட்டுப்பாளையம் அருகில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக, மது போதையில், வாகனம் ஓட்டி வந்தவர்கள், ெஹல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஆவணங்கள் இல்லாமல் பைக் ஓட்டி வந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

Advertisement