மஹா.,வில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பால்கர்: மஹாராஷ்டிராவில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மெயிலில் இன்று பிற்பகலில் வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாசாகேப் பாட்டீல், தனது மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கொண்ட குழுக்கள் விரைந்தன. வளாகத்தில் இருந்த அத்தனை பேரையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை பிரிவினரும் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement