ஐ.பி., தலைவர் தபன் குமார் தேகா பதவி காலம் நீட்டிப்பு

புதுடில்லி: இன்டெலிஜென்ஸ் பீரோ எனப்படும் ஐ.பி., தலைவர் தபன் குமார் தேகா பதவி காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பணியகம் ( ஐ.பி.,) என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பு ஆகும். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் முக்கிய பணி, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவை ஆகும். கடந்த 2022ல் ஐ.பி., தலைவராக தபன் குமார் தேகா நியமிக்கப்பட்டார்; இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவரது பணி நிறைவு பெற்றதை முன்னிட்டு மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளது.

Advertisement