மொபட் மீது வேன் மோதி வெல்டர் பலி

மேட்டூர் : மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த வீரக்கல் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் வெல்டர் சுரேந்திரன், 25. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு சுரேந்திரன், மொபட்டில் புதுக்காட்டு ஓடையில் இருந்து வீரக்கல்நோக்கி சென்றார்.

கோம்புரான்காடு அருகே சென்ற போது, எதிரே வந்த ஆம்னி வேன் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரன் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement