கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

2


கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில், ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.


அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்தி செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சாகர், மணிகண்டன், சந்திப் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர். அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement