சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த 'டீ-பப்ளிக் பள்ளி'

திருப்பூர், ; திருப்பூர் டீ பப்ளிக் பள்ளி மற்றும் தி ஏர்னெஸ்ட் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி பொதுதேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - பழங்கரையிலுள்ள 'டீ பப்ளிக்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பள்ளியின் பிளஸ்2 வகுப்பு மாணவர் அபினவ், 98 சதவீதம் மதிப்பெண் மற்றும் பத்தாம் வகுப்பில் மஹிதா ஹரி, ஸ்ரீ வர்ஷினி ஆகிய, இரு மாணவியர், 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும் முதலிடத்தை பிடித்தனர்.
மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் மாணவி ஸ்ரீ ஹரிணி, 92 சதவீதம் மதிப்பெண் மற்றும் பிளஸ் 1 வகுப்பில் லக் ஷன ப்ரிவின்கா, 97 சதவீதம் மதிப்பெண் பெற்றும், பத்தாம் வகுப்பில் விஷால் சாய், 98 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற மாணவ, மாணவியரையும், பெற்றோரையும் பள்ளியின் சேர்மன், தாளாளர், இயக்குநர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.
மேலும்
-
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சுங்குடி சேலை விற்பனை அமோகம்; 45 பொருட்களின் விற்பனையும் களைகட்டுகிறது
-
த.வெ.க., தனித்து போட்டியிடுவது நல்லது விஜய்க்கு எச்.ராஜா 'அட்வைஸ்'
-
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பாரா?: மாநில வளர்ச்சிக்கு டில்லி பயணம் அவசியம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
-
கூடுதல் மகசூல் தரும் காவிரி பூவன்
-
தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
-
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா; உஷார் நிலையில் சுகாதாரத்துறை