சவர தொழிலாளர் சங்கநிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், ; தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்க திருப்பூர் புறநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதற்கான சங்க கூட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளர் நடராஜன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார். மாநில துணை தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை மாநில அமைப்பு செயலாளர் ஜீவமதி நடத்தினார். மாநில பொதுச் செயலாளர் ராஜா, மாநில முதன்மை தலைவர் கந்தவேல், புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்தனர்.
மாவட்ட தலைவராக பூபதி, செயலாளராக கணேசன், பொருளாளர் உத்தரமூர்த்தி, அமைப்புச் செயலாளர் செல்வகுமார், கொள்கை பரப்பு செயலாளர், கபிலதாசன், துணை தலைவர்களாக, முத்து, மதிவாணன், துணைச் செயலாளர்கள் லோகநாதன், சண்முகவேல், ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.