டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்

தோகா: கத்தாரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 46 வது இடத்திலுள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 130வது இடத்திலுள்ள தென் கொரியாவின் பார்க்கிடம் 0-4 என (8-11, 7-11, 5-11, 8-11) அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா, சீன தைபே வீராங்கனை செங் ஐ சிங்கிடம் 1-4 என்ற (3-11, 7-11, 6-11, 11-6, 5-11) கணக்கில் வீழ்ந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி, தியா ஜோடி 3-1 என (6-11, 11-6, 11-6, 11-9) சிங்கப்பூரின் ஜியான் செங், குவான் ஷெர் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர் ('நம்பர்-48'), உலகின் 'நம்பர்-4' வீரர், ஜப்பானின் ஹரிமோட்டோவிடம் 2-4 என (11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11) என போராடி வீழ்ந்தார்.
மேலும்
-
3 முறை 'நீட்' தேர்வு எழுதிய மாணவன் பயத்தில் தற்கொலை
-
வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து மூன்று பேர் பலி
-
திருப்போரூர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
-
இடைக்கழிநாடு பகுதியில் மாம்பழ சீசன் துவக்கம்
-
செய்யூர் அரசு கல்லுாரியை தற்காலிகமாக ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடத்த முடிவு
-
முன்னதாக துவங்கிய குற்றால சீசன்