திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை

திருமங்கலம் : மதுரை மாவட்டம் கூடக்கோவில் அருகே சாமியாடியவர் திருநீறு பூசி தலையில் அடித்ததில் குழந்தை பிறந்து 40 நாட்களான பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

வளையங்குளத்தை சேர்ந்தவர் கவுதம் 34. தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர். மனைவி பிரியா 26, சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வந்தனர்.

பிரியாவிற்கு 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. கணவருடனான கருத்து வேறுபாட்டால் பிரியா காரைக்குடிக்கு செல்லாமல் இருந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்த பிரியாவிடம் இருந்து 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை காரைக்குடிக்கு கவுதம் துாக்கிச்சென்றார். இதனால் நேற்று காலை கூடக்கோவில் அருகே குலதெய்வமான வேம்புடையான் கோயிலில் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரியாவிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.


இதையடுத்து கவுதமின் தம்பி கவுசிக் சாமியாடினார். அப்போது பிரியாவிற்கு திருநீறு பூசிவிட்டு தலையில் அடித்தபோது மயங்கி விழுந்து இறந்தார். மதுரை ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் விசாரணை நடக்கிறது.

Advertisement