தேனியில் சூதாடிய 18 பேர் கைது
தேனி: ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சூதாடிய 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி எஸ்.ஐ., மலைச்சாமி தலைமையிலான போலீசார் தேனி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கருவேல் நாயக்கன்பட்டி முத்துச்சாமி 59, அல்லிநகரம் பாண்டி 49, பெரியகுளம் டி.வாடிபட்டி முருகவேல் 44, ஆகிய மூவரும் ரூ.400 பணம் வைத்து சூதாடினர். போலீசார் கைது செய்தனர்.அதேப்பகுதியில் பல்லவராயன்பட்டி சுருளிராஜ் 45, மதுரை பொன்னரகம் பழனிச்சாமி 54, பெரியகுளம்சிரில்ராஜ்குமார் 42, தேவதானப்பட்டி செல்வக்குமார் 42, ஆகிய நால்வரும் சூதாடிய போது கைது செய்தனர்.
தேனி: எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் பழனிசெட்டிபட்டி சொக்கநாதன் 61, சோலைமலை அய்யனார் கோயில் தெரு மகாலிங்கம் 55, உத்தமபாளையம் பாண்டி 47, ஆகிய மூவரும். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் முத்துக்குமார் 49, நாகராஜன் 41, பாப்பம்மாள்புரம் வெற்றி 42,உத்தமபாளையம் இளவரசன் 41, ஆகிய நால்வரும் சூதாடியதாக கைது செய்யப்பட்டனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சூதாடிய பூதிப்புரம் நாகராஜ் 36, வீரபாண்டி முத்துக்குமார் 46, தேனி போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு செல்வராஜ் 55, சிவராம் நகர் பழனியப்பன் 71 கைது செய்து, சூதாடிய பணம் ரூ.12,200ஐ கைப்பற்றினர். ஆக மொத்தம் நேற்று முன்தினம் சூதாடிய 18 பேர் போலீசாரால் கைதாகினர்.
மேலும்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
-
மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை