ஷோரூமில் பணம் திருட்டு  

தேனி : பழனிசெட்டிபட்டியில் கிரானைட்ஸ் ஷோரூம் உரிமையாளர் அய்யம்பெருமாள். மே 13ல் தனது டிரைவருடன் கடையில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது ஷோரூமின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரிந்தும், 0.5 மணி' என்ற டி - ஷர்ட் அணிந்த 20 வயது வாலிபர், கல்லாபெட்டியை திறந்து, அதில் வைத்திருந்த பணம் ரூ.21 ஆயிரம், வங்கி ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள், பான், ஆதார் கார்டுகள் வைத்திருந்த பர்சை திருடி சென்றுவிட்டார்.

வீடியோ ஆதாரத்துடன் பழனிசெட்டிபட்டி போலீசில் உரிமையாளர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement