போதை ஒழிப்பு  விழிப்புணர்வு

தேனி, : தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் பழனிசெட்டிபட்டி போலீசார் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு எஸ்.ஐ., சரவணக்குமார், போலீஸ்காரர் ராஜா ஆகியோர் போதை ஒழிப்பு நடவடிக்கைகள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.

இளநிலை பயிற்சி அலுவலர் அவினாஷ் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை பயிற்றுனர்கள் சேகர், முனியாண்டி, நேசராஜா செய்திருந்தனர்.

Advertisement