டிபன் கடைக்காரரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
அயனாவரம் :அயனாவரம், பில்கிங்டன் சாலையைச் சேர்ந்தவர் சஞ்சய் காந்தி, 37. இவர், அதே பகுதியில், 'நம்ம தெரு' என்ற பெயரில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, கடந்த 18ம் தேதி இரவு, நான்கு பேர் வந்துள்ளனர்.
சாப்பிட்டு பணம் கொடுக்காமல், சஞ்சய் காந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பினர். இது குறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து, அயனாவரம், வசந்தம் கார்டன் 2வது தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ரமேஷ், 30, என்பவரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான, அயனாவரத்தைச் சேர்ந்த பாரத், 21, சூர்யா, 29, சீனு, 24, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement